Perambalur: Two Collectors held a meeting regarding drinking water supply; however, the public staged a road blockade with empty pots, demanding water.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் காரைப்பாடி கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை கரைப்பாடி கிராமத்தில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையின் குறுக்கே அமர்ந்து காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த குன்னம் போலீசார் ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூர் கலெக்டராக இருந்து, அரியலூருக்கு மாறுதலாக சென்ற கலெக்டர் மிருணாளினியும், குடிநீர் குறித்து அலுவலர்களுடன் மீட்டிங் நடத்தினார். இதே போல தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் ஷரண்யா அறியும் குடிநீர் வினியோகம் குறித்த மீட்டிங்கை அலுவலர்களுடன் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.











kaalaimalar2@gmail.com |
9003770497