Perambalur: Unidentified Male Body Found Near Wine Shop; Police Investigate!

பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் ஒயின்ஷாப் அருகில் சுமார் 40 வயது உள்ள அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் டவுன் போலீசார் சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து பெரம்பலூர் போலீசில் தமிழ்பிரியா என்பவர் புகார் அளித்தார். அதில், இறந்தவர் தனது கணவர் கபாலி (40), என்றும், குடி போதைக்கு அடிமையானதால் கடந்த 5 வருடங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இது குறித்து போலீசார் மேலும், கபாலி எப்படி இறந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!