Perambalur: Free Coaching Classes for State Government Competitive Exams — Collector Announces!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2026-ஆம் ஆண்டு வெளியாக உள்ள TNPSC Group-1, Group-2, Group-4 போன்ற அறிவிப்புகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில் TNPSC ஒருங்கிணைந்த வகுப்புகள் ( Common Classes -- General Studies மற்றும் பொதுத் தமிழ் ( தமிழ் தகுதித் தேர்வு உட்பட) வரும் 05.06.2026-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுவரை 145 -க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வு ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00மணி வரை நடைபெறும்.
மாநில அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.மாதிரி தேர்வுகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கு பதிவு செய்து தரப்படும்.போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி. போன்ற வசதிகள் இந்த மாதிரி தேர்வின் சிறப்பம்சங்கள் ஆகும்.
போட்டித் தேர்வு எழுத ஆர்வமுள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497