Perambalur: Students wishing to pursue ITI courses may apply; Collector informs.

பெரம்பலூர், ஆலத்தூர் மற்றும் குன்னம், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு 2026-27 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக 16.5.2026 முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் https://skilltraining.tn.gov.in/detitiadm/ என்ற இணையதளம் வாயிலாக 03.06.2026 வரை சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், மெக்கானிக் (மோட்டார் வாகனம்), வெல்டர், அட்வான்ஸ்டு சி.என்.சி, இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங்க் டெக்னிசியன், மெக்கானிக் (எலெக்ட்ரிக் வாகனம்) ஆகிய 7 தொழிற்பிரிவுகள் உள்ளன.
ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஃபிட்டர், மெஷினிஷ்ட், எலெக்ட்ரீசியன், சோலார் டெக்னிஷியன் (எலெக்ட்ரிக்கல்), வெல்டர், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங்க் டெக்னிஷியன், மெக்கானிக் (எலெக்ட்ரிக் வாகனம்), அட்வான்ஸ்டு சி.என்,சி ஆகிய 8 தொழிற்பிரிவுகள் உள்ளன. குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், ட்ராப்ட்ஸ்மேன் (சிவில்), தையல் தொழிற்நுட்பம் ஆகிய 4 தொழிற்பிரிவுகள் உள்ளன.
வெல்டர் மற்றும் தையல் தொழிற்நுட்ப தொழிற்பிரிவுகளுக்கு மட்டும் எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், இதர தொழிற்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு 14 வயது முதல் உச்ச வரம்பு வயது இல்லை, ஆண்கள் 14 வயது முதல் 40 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், அசல் மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ, விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி காலத்தின்போது தரமான பயிற்சி அளிக்கப்படுவதுடன், பயிற்சி முடிவுற்றதும் முன்னணி தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படும்.
மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் அரசின் விலையில்லா சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், மிதிவண்டி, பஸ்பாஸ் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் பிரதிமாதம் துறையால் ரூ.750 உதவித் தொகையும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழ் புதல்வன், புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையும் வழங்கப்படும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பயிற்சியில் சேர விரும்புவோர், பெரம்பலூர் (9499055881), ஆலத்தூர் (9385341464) மற்றும் குன்னம் (9786330055) ஆகிய எண்களில் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொண்டும், மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (04146-290673) அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை (9499055876) தொடர்பு கொண்டும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி தொழில் கல்வி பயின்று, முன்னனி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497