In Perambalur rats trapped in the erection of electric fences, was unlawfully killed Bank Employee
power-shock
பெரம்பலூர் மாவட்டம், சங்குப்பேட்டை, பெரியார் நகரை சேர்ந்தவர் திருஞானமூர்த்தி (வயது 50), வங்கி ஊழியர். இவருக்கு பெரம்பலூர் – விளாமுத்தூர் சாலையில் விவசாய நிலம் உள்ளது.

இன்று மாலை வயலுக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும வீடு திரும்பாததால், சந்தேகித்த உறவினர்கள் தேடி சென்று பார்த்தனர். அப்போது நெற்பயிரில் எலிகளுக்காக போடப்ட்டிருந்த மின்வேலியில் சிக்கி கிடப்பது தெரிய வந்தது.

இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த ஞானமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அன்னமங்கலத்தில் மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்வேலி அமைப்பவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து உயிர் சேதத்தை தடுக்க வேண்டும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!