கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரத்தினவேல் மனைவி ராஜேஸ்வரி (45). இவர் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலராக உள்ளார்.
கடந்த 14ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் பெரம்பலூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பரிசோதித்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்ட்டது. பின்னர், தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
இதை அறிந்த அவரது உறவினர்கள் ராஜேஸ்வரியின் சடலத்தை பெற மறுத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.