பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் மீனா (வயது 18). இவர் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த மீனாவிடம் அவரது தாய் தமிழ்செல்வி வீட்டு வேலை செய்ய சொல்லி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்தபோது மீனா வீட்டு வேலை செய்யாமல் டி.வி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். இதனால் தமிழ்செல்வி, மீனாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மீனா வீட்டில் பருத்தி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனைப்பார்த்த தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. இது தொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497