பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் இருந்து பெரியம்மாபாளையம் செல்லும் சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
வேப்படிபாலக்காடு, பூலாம்பாடியில் இருந்து பெரியம்மாபாளையம் வழியாக அரும்பாவூர், தழுதாழை, தொண்டைமாந்துறை, பெரம்பலூர் செல்ல முக்கிய சாலையாக உள்ளது. நாள்தோறும் அனைத்து தரப்பினரும் இவ்வழியாக வந்து செல்வதால் பூலாம்பாடி பெரியம்மாபாளையம் சாலையை மழைக்காலத்திற்கு முன்பாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்