The teenager who took the video of the woman taking a bath and the woman who was complicit was also arrested!
பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது செல்போனில் வீடியோ எடுத்த அதே ஊரை சேர்ந்த செல்வம் (33) வாலிபன் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி அவரது மகளை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில், நடத்திய விசாரணையில், செல்வம் மற்றும் வீடியோ எடுக்க உடைந்தையாக இருந்த உறவினரான மலர்கொடி (45) ஆகிய இருவரையும் பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.