பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருப்பது இன்று தெரியவந்தது.
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதே கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கலியமூர்த்தி காலையிலும், மாலையிலும் அந்தக் கோயி்லுக்கு சென்று மின் விளக்கு போட்டு வருவது வழக்கமாம். இந்நிலையில், நேற்று மாலை மின் விளக்கை போட்டு வந்த கலியமூர்த்தி, இன்று காலையில் கோயிலுக்கு சென்ற பார்த்த போது, அங்கிருந்த உண்டியல் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று, தேடியபோது கோயில் வளாகத்துக்கு அருகே உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.