பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அருகே வ.களத்தூரை சேர்ந்தவர் சாதிக்பாட்ஷா(வயது45). இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர் இன்று வி.களத்தூர் போலீசில் சாதிக்பாட்ஷா கொடுத்த புகாரைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றுள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497