Perambalur: Anti-corruption police raid the sub-registrar’s office: unaccounted thousands of rupees seized!
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், டிஎஸ்பி., ஹேமச்சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போலீசாரின் இந்த திடீர் சோதனையில் கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக இன்று அதிக அளவில் பத்திரப்பதிவு செய்ய ஏராளமான பொதுமக்கள் காத்திருந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் பெரம்பலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.