Perambalur: Central Government scholarship for OBC, EBC, and DNT students; Collector’s announcement!

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASAVI-Top Class School Education in Schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-2027 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்/புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் https://scholarships.gov.in விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 – 10ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/- மற்றும் 11-12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ / மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்து https://scholarships.gov.in புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 31.08.2026க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் – For Renewal) கடைசி நாள்:15.09.2026 ஆகும். 2026-27 புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ / மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும்.
மேலும், இத்த்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal http://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை http://socialjustice.gov.in -ல் அறிந்து கொள்ளலாம். தகுதியான மாணவ / மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.








kaalaimalar2@gmail.com |
9003770497