Perambalur: Public request for a road to Pachaimalai via Melapuliyur!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தாங்கள் பெரம்பலூர் பகுதியில் இருந்து பச்சை மலைக்கு செல்வது எளிதாக உள்ளதால் மலைக்குச் சென்று வருவதற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை பகுதியில் பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதிகளில் விளையும் விளைப் பொருட்களை விற்பனைக்காக எடுத்து வரவும், இடுபொருட்களை எடுத்து செல்லவும் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் கடந்து துறையூருக்கு செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்புக்காகவும், சிகிச்சைக்காக மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக சென்று வரவும், நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் பச்சை மலையும் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யாவை சந்தித்து தங்களது கிராமம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்து செல்வதற்கு மிக அருகாமையில் உள்ளதால் பச்சைமலை பாளையம் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தை இணைக்கும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை வசதி அமைத்துக் கொடுத்தால், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரம்பலூருக்கு வந்து செல்வதில் எளிதாக இருக்கும் என்றும், எனவே, வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று பச்சைமலையில் உள்ள பாளையம் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்திற்கு வாகனங்களில் சென்று வரும் வகையில் சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பலப்படும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Perambalur: Public request for a road to Pachaimalai via Melapuliyur!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தாங்கள் பெரம்பலூர் பகுதியில் இருந்து பச்சை மலைக்கு செல்வது எளிதாக உள்ளதால் மலைக்குச் சென்று வருவதற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!