Perambalur: Lawyers boycott court in protest against the merger of the Consumer Court with Tiruvarur.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களை 14 ஆக குறைத்து, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்துடன் இணைத்து திருவாரூருக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவை பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இதனால் பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் வழக்கறிஞர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படும். இம்முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டியும், தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் பெரம்பலூரில் செயல்படவும் தமிழக அரசு மத்திய அரசு கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை உடனடியாக கொண்டு செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்றும் நாளையும் இரு நாட்கள் மட்டும் இச்சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகி இருந்து தலைவர் இ.வள்ளுவன்நம்பி தலைமையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன.









kaalaimalar2@gmail.com |
9003770497