Perambalur: Condemnation protest demanding the immediate enactment of a special law against honor killings; call by VCK District Secretary Krishnakumar!


பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மதுரை மேலவளவு கிராமத்தில் 2 தலித் இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலை கண்டித்தும், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்துவரும் ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் உடனடியாக இயற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், நாளை 27-8-2026 காலை 10-மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!