Perambalur: Mystery individual steals domestic gas cylinders; CCTV footage goes viral on social media!

பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள மின்நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டின் காம்பவுண்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் காணாமல் போவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதே போலவே மின் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டிலும் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டரை கடந்த 6ம் தேதி காணாமல் போனது. இது குறித்து முருகேசன் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதிகாலை 4 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் காம்பௌண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்து உள்ளே சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டரை தூக்கிக் கொண்டு அவசரமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சக்திபாலன் என்பவரது வீட்டில் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலிண்டரும் நேற்று முன்தினம் 24ம் தேதி காணாமல் போனது இது குறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது 24 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் தலைக்கவசம் அணிந்தவாறு சவகாசமாக கேட்டை திறந்து கேட்டிற்கு உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலன்டரை திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட முருகேசன் மற்றும் சக்திபாலன் ஆகிய இருவரும் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மின் நகர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் வீட்டின் காம்பவுண்ட் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் திருடு போகும் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கள்ளச்சந்தையில் சிலிண்டர் புக் செய்து சுமார் 30 அல்லது 45 நாட்களுக்கு பிறகு கிடைப்பதால் திருட்டு சிலிணடர் ரூ. 2ஆயிரம் வரை விற்கப்படுதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!