Perambalur: Differently-abled persons held an attention-drawing protest to press for their demands!

31.08.2026 மாற்றுதிறனாளிகள் மானியக் கோரிக்கை அன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டிசம்பர் 3 இயக்கம், பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலவாழ்வு சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு இன்று காலை தமிழகம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்!

அதில், தவெக தேர்தல் அறிக்கையில் (அறம்-2) குறிப்பிட்டது போல், மாற்றுத் திறனாளிகளுக்கு வருவாய்த் துறை மூலம் மாதாந்திர உதவித் தொகை ரூ. 1500-லிருந்து ரூ.3000-ஆகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கி ரூ. 2000 & ஹை சப்போர்ட் நீடு ரூ.1000 வழங்குவதிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து அரசுத்துறைகளிலும் 4 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்கிடவும். அரசாணை எண் 24-ஐ ரத்து செய்துவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்குமேல் தொகுப்பூதியத்தில் அரசு பணிபுரிந்து வரும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யக் கோரும் அரசாணை எண் 151-ஐ நடைமுறைக்கு கொண்டு வந்து அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு அறிவித்ததைப் போலவே மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணமில்லா பயணத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து கவன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், டிசம்பர் 3 இயக்க மாநில நிர்வாகிகள் மாநில தலைவர் வரதன்பூபதி, மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை, மாநில பொருளாளர். இணை தலைவர் மோகன்ராஜ், மாநில துணைத்தலைவர்கள் சீனிவாசன், வேலாயுதம், மாநில மகளிரணி செயலாளர் தமிழரசி, மாநில துணை பொதுச் செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், பிரபு, ஆலோசகர் பாலுமகேந்திரன், பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலவாழ்வு சங்கம் & டிசம்பர் 3 இயக்கம் மாவட்டத் தலைவர் எ.என்.ரவி, மாவட்டச் செயலாளர் சை. சபியுல்லா, மாவட்டப் பொருளாளர் உதிரம் ம.நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!