Perambalur: VCK stages a protest demanding the announcement of a special law against honor killings during the current legislative assembly session.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் ஆணவக் கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்றத் கூட்டத்தொடரில் அறிவிக்க கோரியும், மதுரை மாவட்டம் மேலூரில் செல்வம் மற்றும் அழகர் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ந. கிருஷ்ணகுமார் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் கிழக்கு நகர செயலாளர் தென்றல் சரண்ராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க சண்முக சுந்தரம், அய்யாக்கண்ணு, வெற்றியழகன், இடி முழக்கம், கேட் மணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் காட்டு ராஜா, ஸ்டாலின் லால்,
பாக்கியராஜ், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அய்யம்பெருமாள்,
மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன்.பால்ராஜ், சுற்று சூழல் அணி ஒருங்கிணைப்பாளர் செல்வாம்பாள், ம.வி.இ மாநில செயலாளர் ஜான்சிராணி , மாநில செயலாளர் (க.பொ.வி.இ), மாநில செயலாளர் (க.இ.வி.பே) நிலவன், மு.மா.க மாநில துணைச் செயலாளர் அம்பேத் கோகுல், தொ.அ. மாநில துணைச் செயலாளர் கராத்தே பெரியசாமி, வ.அ மாநில துணைச் செயலாளர் மணிமாறன், தொண்டர் அணி) சபரீசன், வணிகர் அணி மாநில துணைச் செயலாளர் 4ரோடு நடராஜன்,
ஒன்றிய செயலாளர்கள் மாஸ் மணி, மதியழகன், சதீஷ்குமார், செந்தில் வளவன், ராதாகிருஷ்ணன், கவியரசன், வெற்றிவேல் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், பாஸ்கர் உள்பட மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணைச் அமைப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர் மகளிர் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் மற்றும் முகாம் பொறுப்பாளர் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மேற்கு நகர செயலாளர் தங்க இளவரசன் நன்றி கூறினார்.









kaalaimalar2@gmail.com |
9003770497