Perambalur: Consultative meeting of AIADMK North Union cadres!

பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பெரம்பலூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அவைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். பெரம்பலூர் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் வீரமுத்து, கருணாநிதி, ஜானகி, லெட்சுமி, செந்தில்குமார், பன்னீர்செல்வம், மாரியாயி, நல்லப்பன், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர். அ.அருணாசலம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் விஜிஎம் (எ) என்.வெங்கடாசலம், அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான மருதைராஜா, கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சந்திரகாசி, அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிச்சைமுத்து, வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாணவரணி இணை செயலாளர் பூவை மணிஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் குணசீலன், மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர்கள் நெய்குப்பை துரை, லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, பொது குழு உறுப்பினர் ரெங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன், என்.சிவபிரகாசம் , ராஜேந்திரன், நகர செயலாளர் ஆர். ராஜபூபதி, மாவட்ட எம் ஜிஆர் மன்ற செயலாளர் ராஜாராம், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளர் செந்தில்ராஜன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பாலாஜி, மாவட்ட கைத்தறிப்பிரிவு ராமலிங்கம், பெரம்பலூர் தெற்கு ஒன்றிய நிர்வாகி வேலூர் அருணா பாண்டியன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் விளமுத்தூர் சிதம்பரம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், எசனையை சேர்ந்த பெரியசாமி, பெருமாள், ஆலம்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெகதீஷ், கீழக்கரை கவிதா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். பெரம்பலூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497