Perambalur: Demonstration against the central government! DMK District in-charge V. Jagatheesan’s report!
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்வீ. ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கிணங்க , மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன நாளை காலை 10 மணி அளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில் .
ப மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர் வரவேற்புரையில் நடக்கிறது.
இதில், துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.- போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என்.அருண்நேரு.எம்.பி., மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் மாநில நிர்வாகிகள் ,மாவட்ட , ஒன்றிய -,நகர ,பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக குரல் கொடுக்க அலைகடலென திரண்டு வாரீர் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என இவ்வாறு
தெரிவித்துள்ளார்.