சென்னையில் பிரபல தமிழ் ஆர்வலரும் பொறியாளருமான ஹெலினா கிறிஸ்டோபர் எழுதி உள்ள குறளும் விவிலியமும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா குறள் கொண்டாட்டம் என்ற தலைப்பின் கீழ் வெகு விமர்சாயாக நடைபெற்றது. இந்த விழாவில் நீதியரசர் மகாதேவன், காவல்துறை அதிகாரி ரவிச்சந்திரன் , ஜெகத் கஸ்பார் உள்ளிட்ட பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினர். பொறிஞர் ஹெலினாவின் திருக்குறள் பற்று உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு பரவ செய்யவேண்டும் என்றும் குறள் பரப்பும் நிர்வாக மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் விழாவில் பேசியவர்கள் வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் ஹெலினா இயற்றிய பாடல்கள் அரங்கேற்றப்பட்டது. பின்னர் மொரீசியஸ் குறள் பரப்பும் சர்வதேச சங்கத்தின் நிர்வாகி தமது நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகங்கள் உள்ளன என்று பெருமிதம் தெரிவித்தார். ஏற்புரை நிகழ்த்திய பொறிஞர் ஹெலினா தாம் திருக்குறளை போன்று வாழும் மனிதர்களை கவுரவிக்கவேண்டும் என்ன்ற நோக்கில் இந்த விழாவை எடுத்ததாகவும் தமது திருக்குறள் பணி இன்னும் அதிவேகத்தில் தொடரும் என்றும் உறுதி அளித்தா