Kunnam: “The votes you cast for the UdayaSuriyan (Rising Sun’) symbol must serve as a death knell for communal forces,” declared Minister Sivasankar during his election campaign speech.

குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும், அமைச்சர் சிவசங்கர் இன்று லப்பைக்கடிகாடு பேரூராட்சித் தலைவர் ஜாகீர்உசேன், துணைத் தலைவர் ரசூல் அஹமது வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். ஒன்றிய செயலாளர் தி.மதியழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: மதிப்பிற்குரிய நம்ம லப்பைக்குடிக்காடு பெருமக்களே, உடன் வருகை தந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளே, கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகளே, தோழர்களே, உங்கள் அத்தனை பேருக்கும் அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெறுகின்ற தேர்தல் சட்டமன்றத்திற்கான தேர்தல். அதான் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்வது, இது தமிழ்நாடு Vs டெல்லி என்று நடைபெறுகின்ற தேர்தல். எனவே நாம் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.

காரணம் பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு மாநிலத்தில் ஊடுருவி வருவதை நாம் பார்த்து வருகிறோம். தமிழகத்திலே 6 மாதத்திற்கு முன்பாக பீகாரிலே நடைபெற்ற தேர்தலிலே நிதீஷ் குமாரைப் பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தி தேர்தல் களம் கண்டார்கள். தேர்தல் முடிந்து கூட்டணி அமைத்து நிதீஷ் குமாரை முதலமைச்சராக்கினார்கள்.

ஆனால் 5 மாத காலம் கடந்தவுடன் நிதீஷ் குமாரை ராஜினாமா செய்ய வைத்து, இன்றைக்கு பாஜக முதலமைச்சர் பதவியேற்கிறார் என்றால், அவர்களுடைய திட்டம் இந்தியா முழுவதும் இப்படி ஊடுருவதுதான். பீகார் மாநிலம் தமிழ்நாட்டைப் போன்றது. மாநில உணர்வுகள் கொண்ட அந்த மாநிலம்.

எனவே, அங்கே நேரடியாக அவர்களால் வெற்றி பெற முடியாது. இத்தனை ஆண்டுகாலம் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவேதான், நிதீஷ் குமார் கூட்டணியில் சேர்ந்து இன்றைக்கு அவருடைய கட்சியிலே சிக்கல்களை ஏற்படுத்தி அவரை பயமுறுத்தி முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து பாஜக முதலமைச்சரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதற்கு ஒரு வருடம் முன்பு மகாராஷ்டிராவிலே கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சியை உடைத்து தேசியவாத காங்கிரசை உடைத்து அவற்றை வைத்து ஒரு கூட்டணி அமைச்சரவை அமைத்தார்கள். அப்போது சிவசேனாவிலிருந்து பிளவுபட்டவர்களை முதலமைச்சராக்கி அங்கே ஆட்சியை நடத்தினார்கள்.

ஆனால், தேர்தலின் போது யார் முதல்வர் என்று சொல்லாமல் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு வரும்போது அந்தப் பதவியைப் பாஜக கைப்பற்றிக் கொண்டது. சிவசேனாவையும் தேசியவாத காங்கிரசையும் ஏமாற்றினார்கள். இப்படித்தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலும் அதே நிலையில் அதிமுகத் தோளில் அமர்ந்து உள்ளே ஊடுருவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இது ஒருபுறம், இன்னொருபுறம் தேர்தல் தொகுதிகளுடைய மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்ற செயலிலே ஈடுபட்டு நாடாளுமன்றத்திலே தோல்வியுற்று இன்றைக்கு அவமானப்பட்டு நிற்கிறார் மோடியும் அவருடைய சகா அமித் ஷாவும்.

மக்கள்தொகை அடிப்படையிலே தொகுதிகளை மறுவரையறை செய்கிறோம் என்று ஆரம்பித்து வட மாநிலங்களில் எங்கே அவர்களால் வெற்றி பெற முடியுமோ அங்கே மாத்திரம் தொகுதி எண்ணிக்கை அதிகரித்து தென் மாநிலங்களுடைய தொகுதிகளுடைய எண்ணிக்கை குறைப்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

1971-லே இந்தியாவிலே மக்கள்தொகை கட்டுப்பாட்டை முன்னெடுத்த போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் அதைக் கடைபிடித்து நாம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய காரணத்தினால் இன்றைக்கு வட மாநிலங்களை விட குறைவான மக்கள்தொகையோடு இருக்கிறோம்.

ஆனால், வட மாநிலங்களில் அத்தகைய மக்கள்தொகை கட்டுப்பாட்டை கடைபிடிக்காத காரணத்தினால் மக்கள் பெருக்கம் அங்கே அதிகமாக இருக்கிறது. அதை வைத்து அவர்கள் ஆளுகின்ற மாநிலத்தை எப்படியாவது அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்து நிறுத்தி அதன் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் தொடர்ந்து அவர்களே ஆள வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்படுகின்ற காரணத்தினால்தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அதை எதிர்த்து குரல் கொடுத்தார்.

அவர் குரலை எதிரொலித்து வட இந்தியாவைச் சேர்ந்த கட்சிகளும் இந்த தேர்தல் மறுவரையறையை ஒத்துக்கொள்ளாமல் இன்றைக்கு ஆதரித்த காரணத்தினால்தான் மோடியால் அந்த சட்ட வரையறையை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது.

“அந்தக் கூட்டத்தை ஒன்றிய அரசியல் பதவியிலிருந்து கீழே இறக்க வேண்டும். எனவே அந்த அடிப்படையில் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இதை தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி என்கிறார்கள். எனவே திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டை காப்பதற்காக மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இந்தியா சிதறுண்டு போகாமல் காப்பதற்காக இன்றைக்கு இந்தத் தேர்தலிலே வெற்றி பெறுவது அவசியம்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மாத்திரமல்ல, இன்றைக்கு தென்னிந்தியாவிற்கு இருக்கின்ற எல்லா மக்களுடைய உரிமைகளையும் பாதுகாக்கின்ற அளவிற்கு, அதேபோல வடகிழக்கு மாநிலங்கள் சிறு சிறு மாநிலங்களாக இருக்கின்ற அந்த மாநிலங்களுடைய உரிமைகளையும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய நிலையில் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாட்டு தேர்தலுடைய முடிவுகள் தான் இருக்கின்றன.

எனவே, அந்த முடிவுகளை சிறப்பான முடிவாக்குவதற்கு ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒட்டுமொத்தமாக நம்முடைய அணி தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் நம்முடைய லப்பைகுடிகாட்டிலே இருக்கின்ற தோழர்கள் இந்த பேரூராட்சியின் மொத்த வாக்குகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியின் சார்பாக போட்டியிடுகின்ற எனக்கு உதயசூரியன் சின்னதிற்கு நீங்கள் பெற வேண்டும். அதுவே அந்த மதவாத கும்பலுக்கான சவுமணியாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு நம்முடைய பேரூராட்சியின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் அதை உங்களிடத்திலே எடுத்துச் சொல்லி இருக்கிறோம். அதை புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஜமாலி நகர் பிரச்சினையிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தொடர்ந்து காணப்படுகிறது. இன்னும் மிச்சமிருக்கின்ற பணிகளுக்கும் நாம் தொடர்ந்து அதே வகையில் தீர்வு காண்போம் என்ற உறுதியை அளித்து, இந்த வெயில் நேரத்திலும் இந்த வாக்குச் சேகரிக்கின்ற பணியிலே ஈடுபட்டிருக்கின்ற கூட்டணிக் கட்சித் தோழர்களுக்கு நன்றி கூறி, மீண்டும் நம்முடைய வணிகப் பெருமக்களை உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.” என பேசினார்.

முன்னதாக, ஜமாலியா நகருக்கு பட்டா வாங்கியது, லப்பைக்குடிக்காடு – அரங்கூர் உயர்மட்ட பாலம், லப்பைக்குடிக்காடு பேரூருக்கு செய்த பணிகளையும் பட்டியிலிட்டவாறு பிரச்சாரம் கொளுத்தும் 100 டிகிரி பாரான்ஹீட் வெயிலிலும் நடந்தது. மகளிர் அணியினரோ, பெண்களோ இதில் கலந்து கொள்ளவில்லை.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!