Perambalur: TMC President G.K. Vasan and IJK Founder Parivendhar campaign in support of Kunnam constituency AIADMK candidate Saranya!

தேசிய ஜனநாயக கூட்டணியில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள காரை கிராமத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்யா அன்பழகனுக்கு ஆதரித்து ஐஜேகே தலைவர் டாக்டர் பாரிவேந்தர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் இணைந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.

முன்னதாக ஆலத்தூர் கேட் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்கள் படை சூழ பாரிவேந்தர் மற்றும் ஜி கே வாசனுக்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

ஜி கே வாசன் பிரச்சாரத்தில் பேசியதாவது:

கிராமங்கள் நிறைந்த தொகுதி குன்னம், ஆனால் கிராமங்கள் முன்னேறவில்லை விவசாயம் நிறைந்த தொகுதி விவசாயிகள் வளரவில்லை என்றும், குன்னம் சட்டமன்ற தொகுதி பெரிய வளர்ச்சி இன்றி குன்றி போய்விட்டதாகவும், குன்னம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருந்தும் பொறுப்பற்ற அமைச்சராக செயல்பட்டார் என்றும்

தொகுதி மக்களை ஏனோ தானாய் என்று பார்த்து, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், திமுகவின் ஏமாற்றும் சூழ்ச்சி ஒருபோதும் எடுபடாது என்றும் திமுக அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத, கழுத்தை அறுத்த அரசு ஏமாற்றிய அரசு, உங்கள் மீது சுமையை ஏற்றி கசக்கி பிழிந்த அரசு, இந்த நிலை மாற வேண்டும் ஆட்சி மாற்றம் வேண்டும் தமிழகத்தில் எடப்பாடி யார் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்ததாவது: குன்னம் தொகுதி மக்களே நீங்கள் ஐந்தாண்டு காலம் பட்ட கஷ்டம் சொல்லித் தீரப் போவதில்லை
உங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்ய ஐ ஜே கே சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பெண் வேட்பாளர் சரண்யா அன்பழகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்

சரண்யா அன்பழகன் உங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்வார். தேவைகளை நிறைவேற்றி செய்வதில் குறை இருந்தால் என்னிடம் கூறுங்கள் என்றும், ஆளுகின்ற அரசு அகற்றப்பட வேண்டும் எனவும்,
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு 503 வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் 10 கூட நிறைவேற்றவில்லை எனவும், நீட் தேர்வு ரத்து, கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் நீங்கள் கட்டும் வரிப்பணம் ஒரு குடும்பத்திற்கு மட்டும் செல்கின்றது என்றும் அது முதல்வர் ஸ்டாலின் குடும்பம் என்றும், அதன் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், மேலும், திமுக அரசு எந்தவித வளர்ச்சி திட்டமும் கிடையாது என்றும் கிடையாது என தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், முதல்வர் ஸ்டாலின் மேடையிலே பேசியது குறித்து விமர்சித்தார்.

ஐஜேகே மாநில பொதுச்செயலாளர் சண்முகம், ஐஜேகே மாவட்டத் தலைவர் எம்.டி. அன்பழகன், ஆலத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.கே கர்ணன், தமாக கொள்கை பரப்பு செயலாளர் காரை.ஆர். சுப்பிரமணியன், தமாக மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், தமாக பிரமுகர் வரகூர் ராஜசேகர், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!