Kunnam: Union Secretary N.K. Karnan canvassed for votes for the Erattai ilai (Two Leaves) symbol, pledging that upon candidate Saranya’s victory, all basic infrastructure facilities would be provided.

குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் கிழக்கு ஒன்றியதிற்கு உட்பட கிராங்களில் ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன் ஏற்பாட்டில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் சரண்யா தீவிரமாக வாக்குகளை சேகரித்தார், வெடிகள் வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். நொச்சிக்குளத்தில் இன்று வாக்குகள் சேகரித்த ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன் பேசியதாவது:

“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா இந்த இருபெரும் தெய்வங்களின் ஆசியோடு, வருங்கால தமிழ்நாட்டின் முதலமைச்சர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், போற்றுதலுக்குரிய ஐயா எடப்பாடியார் அவர்களின் ஆதரவோடு…

பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி தினகரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆதரவோடு, நம்முடைய தொகுதியிலே போட்டியிடுகின்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் வெற்றி வேட்பாளர் பாரிவேந்தர் ஐயா…

அவருடைய அன்பு மகளாக இங்கே போட்டியிடுகின்ற அன்பிற்குரிய சரண்யா அன்பழகனை அவர்களை ஆதரித்து, நம்முடைய வச்சிகுளம் கிராமத்திலே இந்த சிறப்பான வரவேற்பை ஏற்பாடு செய்த ஐயா அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமைத் தம்பி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், கிளைக் கழகத்தினுடைய செயலாளர் செல்வகுமார் அவர்களே…

டி.எல்.எஃப் டி-யின் செயலாளர் தம்பி ரமேஷ் அவர்களே, கிளை செயலாளர் ரவி அவர்களே, இங்கே அவர்களோடு இணைந்து கழகப் பணியாற்றி வருகின்ற மருதுபாண்டி மற்றும் பிரவீன் போன்ற கழகத்தினுடைய முன்னணி நிர்வாகிகளே…

இந்த நிகழ்விலே கலந்து கொண்டிருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் அன்புச் சகோதரர் செந்தில்குமார் அவர்களே, பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒன்றியச் செயலாளர், இந்த ஊரைச் சேர்ந்த அருமைத் தம்பி கபிலேசன் அவர்களே, முன்னாள் கூட்டுறவு வங்கியினுடைய செயலாளர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆணிவேராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆறுமுகம் அவர்களே…

பாரதிய ஜனதாவினுடைய மாவட்டப் பொறுப்பாளர் அன்புச் சகோதரி தனலட்சுமி அவர்களே, இந்த பகுதியிலே கழகப் பணியைச் செவ்வனே ஆற்ற பூத் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தினுடைய செயலாளர் அருமை அண்ணன் எம்.என். ராஜாராம் அவர்களே…

வடக்கு பகுதியினுடைய பூத் பொறுப்பாளர் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், நொச்சிக்குளம் பகுதியினுடைய பூத் பொறுப்பாளர் அருமைச் சகோதரர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் அவர்களே, சிலுக்குடி திம்மூர் பகுதியினுடைய பொறுப்பாளராக பணியாற்றி வருகின்ற அருமைத் தம்பி இளஞ்செழியன் அவர்களே…

மற்றும் இங்கே நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கின்ற எனது அன்பிற்குரிய பி.ஜே.பி-யின் மாவட்டத் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய முத்தமிச்செல்வன் அவர்களே, பி.ஜே.பி-யின் ஒன்றியச் செயலாளர் அருமைத் தம்பி ராமச்சந்திரன் அவர்களே, பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒன்றியச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் அவர்களே, அய்யாசாமி அவர்களே, தமிழ் மாநில காங்கிரஸ் உடைய ஒன்றியச் செயலாளர் மூர்த்தி அவர்களே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் அவர்களே, மற்றும் வருகை தந்து சிறப்பித்திருக்கின்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் கணேசன் அவர்களே…

மற்றும் அனைத்து ஒன்றியத்தினுடைய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினுடைய நிர்வாகிகள், உங்கள் அத்தனை பேருக்கும் எனது அன்பார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு…

நம்முடைய வெற்றி வேட்பாளர் வெற்றி பெற்றால், நம்முடைய நொச்சிகுளம் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க இந்த நேரத்திலே உறுதி கூறி, நம்முடைய வேட்பாளர் அவர்கள் இப்போது உங்களிடையே உரையாற்றுவார்.”

வேட்பாளர் சரண்யா பேசியதாவது: “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, குன்னம் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன். அனைவரும் எனக்கு இதே அன்பையும் ஆதரவையும் 23.04.2026 அன்று இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து, என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு உங்கள் பொற்பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என பேசினார்.

குரும்பாபாளைம் சி.நாகராஜன், ராஜ்குமார், முன்னாள் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்லக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாலம்பாடி ஜமீன் ஆத்தூர்,ராமலிங்கபுரம், ரசூலாபுரம் மேத்தால் காரைபாடி சில்லக்குடி திம்மூர், அருணகிரிமங்கலம், மாக்காய்க்குளம், நொச்சிக்குளம் புஜங்கராயநல்லூர், ஜெ.பேரையூர், கூத்தூர், பிலிமிசை, இலுப்பைக்குடி, கூடலூர் ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!