மாவட்ட கருவூல அலுவலர் பா.சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டக் கருவூலம் மற்றும் பெரம்பலூர் சாh; கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 2016 மாதம் முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இதுவரை நேர்காணலுக்கு வருகை தராதவர்கள் தங்களின் ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்த நகல், ஆதாவூ அட்டை நகல், பான் கார்டு நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இம்மாத இறுதிக்குள் சம்மந்தப்பட்ட கருவூலத்தை அணுகி நேர்காணல் செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கருவூலக் கணக்கு இயக்குநர் அவர்களின் ஆணைக்கிணங்க 30-06-2016- க்குள் நேர்காணலுக்கு வருகை தராதவர்களின் ஒய்வூதியம் நிறுத்தப்படும். மேலும் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, இதுவரை பெறாதவர்கள் அடையாள அட்டையினை பெற்று செல்லலாம். மேலும் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் உரிய விண்ணப்பம் அளித்து ஒப்புகை பெற்றுச் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.