விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்காக சிமன் என்ற ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.ஸ்பேஸ் எக்ஸ்ன் ஃபேல்கன் 9 ஏவுகனை விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜுன் 30ம் தேதி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றைடையும் இந்த ஏவுகனையின் ட்ராகன் கேப்சுலில் ஒரு புதிய கார்கோ சேர்க்கப்பட்டுள்ளது. அதுதான் சிமன் . சிமன் விண்வெளி வீரர்களின் அசிஸ்டண்டாக செயல்படுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. 5 கிலோ எடை கொண்டுள்ள இந்த ரோபோவில் புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் மிதப்பதற்காக 14 மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. ரோப்பக்களும், விண்வெளி வீரர்களும் ஒன்றிணைந்து வேலைப்பார்க்க முடியுமா என பரிசோதிக்கவே இந்த முயற்சி எனக் கூறப்பட்டுள்ளது.சிமனில்ஆஃப் லைன்பொத்தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான நேரங்களில் ரோபோவை செயலிழக்க செய்ய முடியும். விண்வெளி வீரர்களின் தினசரி வேலைகளை எளிதாக்கி நேரத்தை மிச்சப்படுத்துவது சிமனின் முக்கிய வேலை. ஆங்கிலம் மட்டுமே பேசும் இந்த ரோபோவை ஏர்பஸ் மற்றும் ஐபிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!