<img src=”http://www.v7news.com/wp-content/uploads/2018/06/WhatsApp-Image-2018-06-01-at-11.43.36-PM-300×225.jpeg” alt=”” width=”300″ height=”225″ class=”alignnone size-medium wp-image-7692″ />
<img src=”http://www.v7news.com/wp-content/uploads/2018/06/WhatsApp-Image-2018-06-01-at-11.43.37-PM-300×225.jpeg” alt=”” width=”300″ height=”225″ class=”alignnone size-medium wp-image-7693″ />
விளை நிலங்களை வீடாக்கும் திட்டத்துக்கு மாற்றாக கிங் மேக்கர் ரியல் எஸ்டேட் நிறுவனம் விளைநிலங்களில் பசுமை புரட்சியை ஏற்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்து வெற்றியும் கண்டுள்ளதுகிங் மேக்கர் ரியல்எஸ்டேட் “ஓங்கூர் பண்ணை நிலத்தின் 5-வது பிரிவு” துவக்க விழா சென்னை, வட பழனி, குமரன் காலனி சாலை, சிகரம் செலப்ரேஷன் ஹாலில் நடைபெற்றது. கிங் மேக்கர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஃபெய்ரா தலைவர் ஆ.ஹென்றி, ஜெயா டிவி மோகன்ராஜ், தமிழ் ஆர்வலர் அம்பேத்கார் பிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் விளைநிலங்களில் பயிரிட்டு வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 4 பண்ணை நில திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிங்மேக்கர் நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகர்., தமது நிறுவனம் மூலம் விளைநிலங்களில் பயிரிடுவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதுடன் அவர்களை வேளாண் வாழக்கையை முழுமையாக கடைபிடிக்க உதவிகள் புரிவதாக தெரிவித்தார். விளை நிலங்களை அழித்து வீடுகள் கட்டுவதை தடுத்து , வேளாண் பயிரிடல் மூலம் பசுமை புரட்சியை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் தற்போது சென்னை அடுத்துள்ள மேல் மருவத்தூர் அருகே 5-வது பண்ணை திட்டம் செயல்பட இருப்பதாகவும் தேவை ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் தங்களது வேளாண் பசுமை புரட்சி திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த திட்டத்தின் கீழ் நிலங்களை பெற்று வேளாண் தொழிலுக்கு வலுவூட்டும் வாடிக்கையாளர் களுக்கு, பெய்ரா தலைவர் ஹென்றி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த பசுமை புரட்சி திட்டம் தமிழகம் முழுக்க செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் அவர் கூறினார்.