தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் வெளியில் இருந்து செயல்படுவதைவிட சட்டமன்றத்துக்குள் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தூத்துக்குடி சம்பவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூற முடியாது என்றும், காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.