rupee1000 பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே டூவீலரில் கொண்டு வரப்பட்ட 1 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வரும், மே 16 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கநாதன் தலைமையில், தலைமை காவலர் முத்துகுமார் உள்ளிட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு போலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டதில் வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த கமால்பாஷா மகன் முகமதுரபீக் (27) என்பவர் உரிய ஆவனங்கள் இன்றி ஒரு லட்ச ரூபாயை கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர். பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் பேபி மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!