For students who score less than 6 people in the treatment of attacked teacher


பெரம்பலூர் அரசு பள்ளியில் குறைவாக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை ஆசிரியை பிரம்பால் அடித்தால் காயமடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் துறையூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 6ம் வகுப்பு ஏ, மற்றும் பி வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் வரலாறு பாடத்திற்கான மாதிரி தேர்வு நடத்தி உள்ளார். அதில் சுமார் 25 மேற்பட்ட மாணவர்கள் குறைவான மதிப்பெண்களை எடுத்ததால், கோபமுற்ற ஆசிரியை மாணவர்களை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. மதிய இடைவேளைக்கு பின்பு நடந்த சம்பவத்தால் பாதிக்கும் மேற்பட்ட அடிபட்டதால் வீடுகளுக்கு சென்று விட்டனர். மாலை ஆறு மணிக்கு மேல் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் வந்து பார்த்த போது மாணவர்கள் படுக்கையில் படுத்துள்ளதாகவும், ஆசிரியை தாக்கியதில் ரத்தகட்டும், கை, கால்கள் மற்றும் உடல் பகுதிகளில் வலி இருப்பதாக தெரிவித்ததின் பேரில் பெற்றோர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பாதிக்ப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!