2-year-old child killed in a bucket of water near the In Perambalur stray!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் இந்திரா நகரில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன். கல் உடைக்கும் தொழிலாளி, இன்று இவரது மனைவி செல்வி சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். கோவிநதன் பால் வாங்க கடைக்கு சென்று விடடார்.
அப்போது அங்கு தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் வாளியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தலைகீழாக தவறி விழுந்தது, மூச்சு திணறிய மோனிசா மயக்க மடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மோனிசாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.