25th full victory should be: DMK executive committee resolution passed || 25ம் தேதி முழுஅடைப்பு வெற்றி பெற வேண்டும் : திமுக செயற்குழுக் கூட்டம் தீர்மானம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி முழு அடைப்பு வெற்றி பெற செய்ய வேண்டுமென திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று பெரம்பலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வறட் சியால் பாதித்துள்ள தமிழக விவசாயிகளை வஞ்சித்துவரும் மத்திய, மாநில அ ரசுகளைக் கண்டித்தும் வரும் 25ம்தேதி திமுக தலைமையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் இணைந்து மாபெரும் மாநிலம் தழுவிய முழு கடை அ டைப்புப் போராட் டத்தை வெற்றி பெறச் செய்யவும், கட்சியின் வளர்ச்சித் ப ணி கள் குறித்தும் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது; குடிநீர்த் தட்டுப்பாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள குறைகளை சரி செய்து முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்துமதி, மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி மற்றும் ஒன்றியச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497