Corona vaccine for 3,465 people: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 193 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள், இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தும் விதமாகவும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1,120 நபர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 498 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 894 நபர்களுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 953 நபர்களுக்கும் என மாவட்டத்தில் மொத்தம் 3,465 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டத்தை உருவாக்கவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.