5 thousand per month, which suffered drought farm to grant workers, communists conference resolution

perambalur-cpm

வறட்சியால் பாதிக்கபட்டுள்ள விவாசய தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி, பெரம்பலூரில் நடந்த விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் இரு நாட்களாக மாநில தலைவர் ஏ.லாசர் தலைமையில் நடை பெற்றது.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிள், தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், வறட்சியால் தமிழகம் முழுவதும் வேலையின்றி தவித்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றும், பருவ மழைகள் போதுமான அளவிற்கு பெய்யாமல் பொய்த்து விட்டது. பருவம் தவறி பெய்யும் மழையால் நிலைமை சீரடைய போவதில்லை, இதனால் 12 விவசாயிகள் தற்கொலை கொண்டுள்ளனர்.

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவதுடன், நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் சம்பளமாக வழங்கவும், பேரூராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்றும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பதுடன், ரேசன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு மாதம் 30 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வங்ககளில் தனி கவுண்டர் (சாரளம்) திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 10 தேதி விவசாயத் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், மாநில துணைச் செயலாளர் லதா, தேசிய தலைவர் திருநாவுக்கரசர், மாநிலத் துணைத் தலைவர்கள் சந்திரன், வசந்தாமணி, பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர்கள் ரமேஷ் (பெரம்பலூர்), இளங்கோவன் (அரியலூர்) , பழனிசாமி (திருச்சி), ஸ்டாலின்(நாகை), குமரராஜா திருவாரூர்), மாவட்டத் தலைவர்கள் காமராஜ் (பெரம்பலூர்), வெங்கடாசலம் (அரியலூர்), மாவட்ட பொருளாளர்கள் ராஜேந்திரன் ( பெரம்பலூர்), சவுரிராஜன் ( அரியலூர்), வட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!