5th standard only All-pass plan: the new Education Policy Issue by Indian government
5-ம் வகுப்புவரை மட்டுமே ஆல் பாஸ் திட்டம்: புதிய கல்வி கொள்கை வெளியீடு
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, அக்கொள்கையின் முக்கிய அம்சங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தற்போது, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதை மாற்றி, 5-ம் வகுப்புவரை மட்டுமே ‘ஆல் பாஸ்’ திட்டம் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8-ம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதால், இந்த மாற்றம் செய்யப்படும்.
அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5-ம் வகுப்புவரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாக கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம். அப்படி செய்தால், இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது மொழியை, அரசியல் சட்டத்துக்குட்பட்டு, மாநில அரசு தேர்வு செய்யலாம். பள்ளி, பல்கலைக்கழக அளவில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்கான வாய்ப்பு பரவலாக்கப்படும்.
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும். கல்வித்துறையில் முதலீடு அதிகரிக்கப்படும். வெளிநாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைய ஊக்குவிக்கப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.