A consultation and review meeting of the Trichy zone-level DMK State Adi Dravidian Welfare Committee team is being held in Perambalur: Former MLA Duraisamy reports!

தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அணி சார்பில் திருச்சி மண்டல அளவிலான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் பெரம்பலூரில் நடக்கிறது. இது குறித்து மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பா.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அணி சார்பில் திருச்சி மண்டல அளவிலான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம், (திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி மாநகரம் கிழக்கு,மேற்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு, பெரம்பலூர், அரியலூர்). பெரம்பலூர் மாவட்டத்தில், 29.12.2024,(ஞாயிற்றுக்கிழமை), காலை 9.00. மணியளவில், பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சகுந்தலா சுப்ரமணியம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதற்கு, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி.எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் -திருச்சி மண்டல பொறுப்பாளர் பா.துரைசாமி வரவேற்புரையாற்றுகிறார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலை வகிக்கிறார். திமுக துணைப் பொதுச்செயலாளர் – மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ். எம்.பி., ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் ம.மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், 9- மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே.சி.ஆர்.குமார் நன்றியுரையாற்றுகிறார். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என இவ்வாறு பா.துரைசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!