Aadi Mata Puja at Perambalur Sanguppettai Muthumariamman Temple: Devotees brought Milk Pots
பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத பூஜை விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் பக்தர்கள் விரதமிருந்து பக்தியுடன் 20வது வார்டு மாரியம்மன் கோயிலிலிருந்து பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு, பன்னீர், சந்தனம், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்களால் அலங்கரித்து தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை பக்த்தர்கள் வழிபட்டனர்.
19 வது வார்டு மாயவன் ஆசிரியர் மகன்கள் செந்தில், செல்வம், சிவா, மற்றும் சின்னசாமி மகன்கள் செந்தில், செல்வம் ஆகியோரின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பட்டது. விழா ஏற்பாட்டினை மாரியம்மா மகளிர் குழுவினர், முத்துமாரியம்மன் கோயில் பூசாரி வெ.நீதிதேவன், ஊர் பொதுமக்கள், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். ஆடி மாத விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களும், கொடிய நோய்யிலிருந்து காப்பாற்றும் உலக ஒற்றுமை உண்டாக்கும் என்பது ஐதீகம்.