An online legal awareness camp was held in Perambalur on the eve of World Human Rights Day.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். சுபாதேவி,உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி, திரு. ஜி. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி ஆ. வினோதா, முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் டி. ஜெயசித்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட நீதிபதி, ஜி. கருணாநிதி பேசியதவது:

மனித உரிமைகள் என்பது நாட்டில் யாவரும் எங்கும் சமமாக வாழ உரிமை உள்ளது, உரிமை என்பது யாரும் வழங்க வேண்டியதில்லை, பிறக்கும் போதே ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே கிடைத்து விடுகிறது. தீண்டாமை என்பது எந்த வடிவில் இருந்தாலும் அவற்றை களைந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஒருவரின் உரிமையை தடுப்பது சட்டத்தின் முன் குற்றமாகும் என்றும் அரசியலமைப்பின் தோற்றம் மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு குறித்தும், பொதுமக்கள் தங்களின் சட்ட மற்றும் சட்ட சாரா அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என்றும் பேசினார்.

காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா பேசுகையில், பெரம்பலூரில் பெண்கள் பாதுகாப்பிற்காகவம் உரிமைக்காவும் தொடந்து பெரம்பலூர் காவல் துறை செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் பொதுவான வேத நூலாக இந்திய அரசியல் சட்டம் உள்ளது என்றும் அனைவருக்கும் உரிமையினை பெற சமவாய்ப்பு உள்ளது என்றும் உரையாற்றினார்.

இம்முகாமில் One Stop Crisis Team உறுப்பினர் டி.கீதா வரவேற்ற அவர், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களின் ஜந்து விதமான பிரச்சினைகளுக்கு தீர்வும், பெண்களுக்கு பாதுகாப்பும் வழங்க 181 என்ற எண் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் சுந்தரராஜன் பொதுமக்களுக்கு உரிமை மறுக்கப்படும் போது சட்டமும், மாவட்ட நீதிமன்றங்களும் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது என்று தெரிவித்தார். வளரிளம் பருவத்தினருக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தை திருமண முறை ஒழிப்பு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரூபிகா, குழந்தை திருமண தடுப்பின் அவசியம் குறித்தும் பெண் கல்வியின் முன்னேற்றம் பற்றி பேசினார்.

இம்முகாமில் One Stop Crisis Team உறுப்பினர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள், கொளக்காநத்தம் மற்றும் மலையாளப்பட்டி கிராம பொதுமக்கள் இணையவழியில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம். வினோதா நன்றி தெரிவித்து பேசியதாவது: மனித உரிமைகள் பாதுகாப்பிற்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு முகாம்களை நடத்தி சட்ட விழிப்புணர்வும், சட்ட உதவியும் செய்து வருகிறது தெரிவித்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!