Are eligible to apply for jobs in the Perambalur employment office workspace water bearer
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு குடிநீர் கொணர்பவர் பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடம் பொதுப்பிரிவு முன்னுரிமையற்றோருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடமாகும்.
இப்பதவிக்கான கல்வித்தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். உச்ச வயது வரம்பு 01.07.2016 அன்று பொதுப்பிரிவு 30 வயதிற்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவினர் 32 வயதிற்கு மிகாமலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் 35 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
தகுதியுடைய மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், எண். 138 – 1 தெற்கு, துறைமங்கலம் (மாவட்ட மைய நூலகம்; எதிரில்) என்ற முகவரியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பங்கள் பெற்று வருகின்ற 29.11.2016 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.