At the state level, is the highest ranked student hemalatha appreciation by civil service employee
பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.4,ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார்.

2016-ஆம் ஆண்டு மார்ச் – ஏப்ரலில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வில் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரைிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி த.ஹேமலதா என்பவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட 4 பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பாடங்களிலும் முதலிடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.1000- வீதம் 4 பாடங்களுக்கும் சேர்த்து ரூ.4 ஆயிரத்திற்கான காசோலையினையும், பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சிப் பணியாளர் நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!