Bharatha Cleanliness Campaign: Clustered environment for the development of toilet training
பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை கிராமத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் தனி நபர் இலவச கழிவறை செயலாக்கத்தில் சூழல் மேம்பாட்டு சுகாதார கழிவறை என்ற புதிய கழிவறையை செயலபடுத்துவது குறித்து ஒருநாள் பயிற்சி நேற்று நடைபெற்றது.
இக்கழிவறைக்கு பூமிக்கு கீழ் செரிமான தொட்டி என்ற அமைப்பு தேவையில்லை அதற்கு தரைக்குமேல் இரண்டு பிரிவுகளாக கட்டடம் கட்டி அதன் மேல் கழிவறை கோப்பையை பதித்து கழிவறை பயன்படுத்த வேண்டும். இதில் பிரத்தியோகமாக மலம், தண்ணீர், கழிவுநீர் மூன்றும் ஒன்றோடு ஒன்று இணையாது. இவை அனைத்தும் தனித்தனியாக சேகரம் செய்யப்பட்டு வவிசாயத்திற்காக மறுசுழற்ச்சிக்கு பயன்படுத்தபடுகிறது. இதனால் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. மேற்காணும் கழிவறை பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எசனை, எளம்பலூர், கவுள்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் கட்ட உத்தோசிக்கப்பட்டு உள்ளது.
இப்பயிற்சியினை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் எசனை, எளம்பலூர், கவுள்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 12 கொத்தனார்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியினை தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, மற்றம் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், எசனை ஊராட்சி மன்ற தலைவர் ராம்தேவ், ஊராட்சி மன்ற செயலாளர் சரவணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர்.