book fairs do Book writers exasperated S.Ramakirusnan Speech


பெரம்பலூர் மாவட்டத்தில் நேஷ்னல் புக் டிரஸ்ட் மற்றும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா – 2017 ன் துவக்க விழா 27.1.2017 அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சிப் பணியாளா க.நந்தகுமார் தலைமையில்;, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசுகையில் தெரிவித்ததாவது :

என்னை போன்ற எழுத்தாளர்களை சோர்வடையாமல் தொடர்ந்து நல்ல பல புத்தகங்களை எழுத வைப்பது இது பல்வேறு பகுதிகளில் நடைபெறும் புத்தக திருவிழாக்களே. இதன்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களிடம் உலகின் தலைசிறந்த புத்தகங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

சமூகத்தில் படிக்காத மேதை இருந்தாலும், யாராலும் படிக்காமல் மேதையாக முடியாது. உலகின் தலை சிறந்த புத்தகங்கள் மனித உறவுகளை மேன்மை உள்ளதாக மாற்றம் அடைய செய்கின்றன. மேலும் இது நல்ல போன்ற புத்தகங்களை படிப்பவன் சாமானியன் அல்ல, அவர்களை புத்தகங்கள் மிகப்பெரிய ஆளுமைக்கு சொந்தகாரர்களாக மாற்றும் வல்லமை படத்தவை. மேலும் நம்மையும், நாம் வாழுகின்ற இந்த சமூகத்தையும் மேம்படுத்திக்கொள்ளும் அரும்பணியை இது போன்ற புத்தகங்கள் செய்கின்றன, என தெரிவித்தார்.

இவ்விழாவில் மக்கள் சிந்தனையின் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், மக்கள் பண்பாட்டு மைய தலைவர் சரணவன், செயலாளர் ஜெ.அரவிந்தன் மற்றும் பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் இன்றைய நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!