Chief Minister Joseph Vijay as a Prime Ministerial candidate? Discussing that is untimely! VCK’s Thol. Thirumavalavan responds.

பெரம்பலூரில், மாவட்ட அளவிளான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருகைபுரிந்த சிதம்பரம் தொகுதி எம்.பியும், விசிக தலைவருமான தொல். திருமாவளவனிடம் செய்தியாளர் சந்தித்து போது அளித்த பேட்டி:

நிருபர்: பிரதமர் வேட்பாளராக விஜய் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மோடி ஆகிய இருவரும் தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்வார்கள’ அப்படின்ற மாதிரியான… இந்த இந்த ரெண்டு விஷயங்களை எப்படி பாக்குறீங்க?

தலைவர் தொல். திருமாவளவன்: விஜய் அவர்களை பிரதமர் வேட்பாளர் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக பிரச்சாரம் செய்யவில்லை. அவருடைய தொண்டர்கள், அவருடைய வழித்தோன்றல்கள் ஆர்வத்தின் மிகுதியால் அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அது வந்து ஒரு அரசியல் நிலைப்பாடாக நாம் பார்க்க முடியாது. த.வெ.க.-வின் அரசியல் நிலைப்பாடாக, அதிகாரப்பூர்வமான நிலைப்பாடாக அதை நாம் பார்க்கத் தேவையில்லை.

ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த தொண்டர்களும், அந்த கட்சியின் தலைவர் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுவதும், பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுவதும் இயல்பான ஒன்று. அதைத் தொண்டர்கள் சொல்வதை சிலர் ஊதிப் பெருக்குகிறார்கள், அவ்வளவுதான்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கின்றன. அந்தத் தேர்தலின் போதுதான் தேசிய அளவில் பிரதமர் யார், எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்த நிலைப்பாடுகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும். ஆகவே, இப்போதைக்கு அதைப் பற்றிப் பேசுவது காலப் பொருத்தப்பாடு இல்லாத ஒன்று என பதிலளித்தார். அப்போது மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், விசிக பிரமுகர் ரா. கிட்டு உள்ளிட்ட பலர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!