Collector V.Sanda gave a sum of Rs.2.42 crore Loan to women’s self help groups near Perambalur.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில், மகளிர் திட்டம் மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த 70 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.42 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. கடன் முகாமில் கலந்து மாவட்ட கலெக்டர் வே.சாந்தா 17 மகளிர; சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:

குடும்ப பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் பெண்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையில் தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும், பெண்களின் வருவாயை உயர்த்தும் வகையிலும், அவர்களின் தொழில் மேம்பாடு அடையும் வகையிலும் மகளிர் திட்டத்தின் சார்பில் கிராமப் புறங்களிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக கிராமப் புறங்களிலுள்ள பெண்கள் அனைவரும் ஒண்றினைந்து பால் கறவை மாடு வாங்குவது, தையல் கடை நடத்துவது, குடிசை தொழில் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்கள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வாயிலாக பெண்கள் அனைவரும் சுய சார்புள்ளவர்களாகவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தவர்களாகவும் விளங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வங்கிகள் அனைத்தும் சுய உதவிக் குழுவிற்கு அதிகளவில் கடன் வழங்க முன்வர வேண்டும். மேலும் வங்கிகள் மூலமாக கடனுதவிகளை பெற்ற அனைவரும் தங்கள் தொழில்களை திறம்பட செய்து தங்கள் வாழ்க்கையில்ல் முன்னுக்கு வர வேண்டும், என பேசினார்.

இதில் மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள்அய்யாகண்ணு, துணைத் தலைவர் பவானி ரெங்கராஜ், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் அருண்பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!