Cut, copy, paste and even unknown to the Collector PRO office in perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை பொதுமக்களுக்கு எடுத்து செல்வது செய்தி மக்கள் துறையின் முதன்மை பணி. இதற்கு ஆண்டு தோறும் அரசு பல லட்ச ரூபாய்களை சம்பளமாக வாரி வழங்கி வருகிறது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் பி.ஆர்.ஓக்கள், நேர்காணல் இல்லாமல் (பின்வாசல் வழியாக) அரசியல்வாதிகளின் வாரிசுகளை மட்டும் இப்பணிக்கு நியமனம் செய்கின்றனர். இவர்கள் 3 லிருந்து 5 ஆண்டுகளில் கெஜட்டடு ஆபிசர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
ஆனால், செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு பணிக்கு வருகிறவர்கள் மொழிவளம், ஆளுமைத்திறன், மற்றும் பேச்சு, மொழி, நடை ஆகியவற்றில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக சமயோசிதத்துடன் மிளிருதல் வேண்டும்.
சிலர் கட்சியின் அரசியல் வாரிசுகளாகவும், சிலர் தற்போது 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை கையூட்டாக கொடுத்து பணிக்கு வருகின்றனர். ஆனால், கடமைக்கு வேலை செய்வதால் பல செய்திகள் தவறாக பிரசுரமாகவோ, குழப்பத்தை விளைவிக்கலாம்.
தேர்தல் அறிவிப்பு வெளியான தேதி செய்தி வெளியிடும் தேதி ஆகியவற்றை தவறாக செய்திக்குறிப்பு அனுப்புவதால் செய்தியாளர்களோ, செய்தி நிறுவனங்களோ, அந்த செய்தியை படிப்பவர்களை குழப்படைய செய்யலாம்.
அது போன்ற செய்தியைதான் பெரம்பலூர் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளதை காணலாம்.