Deepening of wells requires permission to remove the stones

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறுகளை ஆழப்படுத்தும் போது அந்த கிணறுகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை அப்புறப்படுத்துவதற்கு எடுத்து செல்ல அனுமதி பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த வட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களது வயலில் உள்ள கிணறுகளை ஆழப்படுத்தும் போது அந்தந்த வட்டாட்சியர்கள் அல்லது வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடமிருந்து அனுமதி பெற்று வெட்டப்பட்ட கற்களை எடுத்து செல்லுமாறு அனைத்து விவசாயிகனையும் கேட்டுக் கொண்டுள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497