Demonstration in Namakkal district condemning state government: 5000 people to take part in resolution

நாமக்கல்லில் வரும் 18ம் தேதி மாநில அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்ள கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் உடையவர் தலைமை வகித்தார். இதில் மாவட்டபொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வரும் 18ம் தேதி செவ்வாய்கிழமை நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், உள்ளாட்சி துறையில் டெண்டர் வழங்கிய ஊழல், முட்டைகொள்முதல் ஊழல், பஸ் வாங்குவதில் ஊழல், வாக்கி டாக்கி வாங்குதலில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து மாநில அரசை கண்டித்து நாமக்கல்லில் நடைபெறும் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநிலமகளிர் தொண்டரணிதுணைஅமைப்பாளர் ராணி, மாவட்டதுணைசெயலாளர்கள் ராமலிங்கம்,பொன்னுசாமி,விமலாசிவக்குமார்,மாவட்டபொருளாளர் செல்வம், தலைமைசெயற்குழுஉறுப்பினர்கள் பவுத்திரம் கண்ணன்,இளஞ்செழியன்,பொதுக்குழுஉறுப்பினர்கள் அழகரசு,

முன்னாள்எம்எல்ஏ பழனியம்மாள்,நகரசெயலாளர் சங்கர், நகரபொறுப்பாளர் மணிமாறன்,ஒன்றியசெயலாளர்கள் துரைசாமி, ஜெகநாதன், ராமசுவாமி, அசோக்குமார், கவுதம், பழனிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளியப்பன், சார்பு அணி அமைப்பாளர்கள் ராஜேஸ்குமார், ஆனந்தன், சாம் சம்பத், துணைஅமைப்பாளர்கள் இளைஞரணி ராணா ஆனந்த், கதிர்வேல், ஆனந்தகுமார், காந்தி, நந்தகுமார்,மாணவரணி ஆனந்த், பொறியாளர் அணி ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!