#Do not celebrate the birthday: Rajnikanth’s request to fans
தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள். இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரஜினியிடம் இருந்து ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஜினியின் பிஆர்ஓ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும், பேனர்கள், போஸ்டர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தலைவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அவர் இறந்த இரண்டாவது நாள் பத்திரிகையாளரும், ரஜினியின் நண்பருமான சோ காலமானார். இதை எல்லாம் மனதில் வைத்து தான் ரஜினி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.