Do not deceive the public by relying on fake announcements: Perambalur Collector Information!

கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து ரூ 15,000 முதல் ரூ 18,000 சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் எனவும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் மோசடி தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பரவி வருகிறது.

கால்நடை பராமரிப்புத் துறைக்கு சம்பந்தமில்லாத தவறான இந்த தகவலை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா அறிவுறுத்தி உள்ளார்.

இதுபோன்ற தவறான தகவல்களை தங்களிடம் யாராவது தெரிவித்தால் அது குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு 9443191716 எண்ணில் உடனடியாக தகவல் அளிக்க தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!